உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்

0
1793
world's 2018 population best city

2018 ஆம் ஆண்டின் மக்கள் வாழ்வதற்கு அதிசிறந்த நகரமாக ஒஸ்திரியாவின் தலைநகரமான வியன்னா நகரம் என தெரிவு செய்யப்பட்டுள்ளது. (world’s 2018 population best city)

2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முன்னணியில் இருந்த அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் அதிசிறந்த 10 நகரங்களின் குறியீட்டில் அவுஸ்திரேலியாவின் மூன்று நகரங்களும், கனடாவின் மூன்று நகரங்களும் ஜப்பானின் இரண்டு நகரங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

‘த இகொனொமிஸ்ட்’ சஞ்சிகையினால் உலகம் முழுவதிலும் உள்ள 140 நாடுகளின் நகரங்களை கருத்திற்கொண்டு ஆண்டுதோறும் வெளியிடப்படும் குறியீட்டுத் தயாரிப்பில் நகரின் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை, கல்வி வசதிகள், சுகாதாரம் மற்றும் கலாசாரம் முதலியவை பரிசீலிக்கப்படுகின்றன.

இந்த குறியீட்டின்படி உலகில் வாழ மிகவும் தகுதியற்ற நகரமாக, இந்த ஆண்டும் சிரியாவின் டமஸ்கஸ் நகரம் தெரிவாகியுள்ளது.

பங்காளதேஷின் டாக்கா, நைஜீரியாவின் லாகொஸ், பாகிஸ்தானின் கராச்சி, சிம்பாவேயின் ஹராரே மற்றும் லிபியாவின் திரிபொலி ஆகிய நகரங்கள் வாழ்வதற்கு பொருந்தாத நகரங்களாக நடத்தப்பட்ட ஆய்வின்படி தெரியவந்துள்ளது.

உலகில் 140 நாடுகளில் நகரங்களை கருத்திற்கொண்டு உலக பொருளாதார நுண்ணறிவு பிரிவின் மதிப்பீட்டின்படி உலகில் வாழ்வதற்கு அதிசிறந்த நகரங்களில் கடந்த வருடம் 124 இடத்தை பெற்றிருந்த கொழும்பு நகரம் இந்த ஆண்டு 130 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

சமூக ஸ்திரத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுசூழல், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஒரு அளவுகோலாக பயன்படுத்தப்பட்டது.

கடந்த காலங்களில் சமூகங்கள் மத்தியில் ஏற்பட்ட வன்முறை சூழ்நிலையினால், அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் காரணமாக கொழும்பின் ஸ்திரத்தன்மை கணிசமான அளவு குறைந்துள்ளதாக உலக பொருளாதார நுண்ணறிவு பிரிவு கூறுகின்றது.

இதுவே 124 ஆம் இடத்தை பெற்றிருந்த கொழும்பு நகரம் 130 ஆவது இடத்திற்கு சரிவதற்கு முக்கிய காரணம் என்றும் உலக பொருளாதார நுண்ணறிவு பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; world’s 2018 population best city