’இலங்கையின் நாணயத்தாள்களை சீனாவே அச்சிடுகின்றது’ : சர்ச்சையில் சிக்கியது இந்தியா

0
533
china printing sri lanka india money

வெளிநாட்டு பொருளாதாரங்களில் செல்வாக்கை செலுத்தும்​ நோக்கில், இலங்கை உள்ளிட்ட பல வௌிநாடுகளின், நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சர்வதேச ஊடக​ம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(china printing sri lanka india money,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,)

சீனா எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தாள்களையும் அச்சிடவில்லை என அந்நாட்டு நாணயத்தாள்கள் அச்சிடும் நிறுவனத்தின் தலைவரான, லியூ கியூஷேங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் நேபாள நாணயத் தாள்களை அச்சிட ஆரம்பித்ததன் பின்னர், பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, பிரேசில், போலாந்து ஆகிய நாடுகளின் நாணயத் தாள்களை அச்சிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நாணயத் தாள்கள் சீனாவில் அச்சிடப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அந்நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த செய்தியை இந்திய நிதி அமைச்சு முற்றாக மறுத்திருந்தது.

இந்திய நாணயத் தாள்கள் இந்திய அரசாங்கத்தினால், றிசேவ் வங்கியின் அச்சகங்களிலேயே அச்சிடப்படுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:china printing sri lanka india money,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,