ராணுவத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் முன் வரவேண்டும்: கமல்ஹாசன்

0
894
india tamilnews youth come forward work army kamalhassan

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறான எண்ணம் என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.india tamilnews youth come forward work army kamalhassan

கமல்ஹாசன், பூஜா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள “விஸ்வரூபம்-2” திரைப்படம், சென்னை கிண்டி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் திரையிடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட கமல்ஹாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ராணுவ அதிகாரிகள் மையத்தில் கற்றுக் கொண்டது அதிகம் என்றும், பயிற்சி பெறும்போது நெஞ்சில் கர்வம் எழும் எனவும் குறிப்பிட்டார்.

ராணுவத்தில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும், என கேட்டுக் கொண்ட கமல்ஹாசன், வேலை தேடும் இளைஞர்களுக்கு சிறந்த இடம் ராணுவம் என்றும் கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :