அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி – பிரதமர் மோடி உறுதி

0
331
india tamilnews prime minister narendra modi's victory next election

அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி, மாபெரும் வெற்றி பெறும்,” என, பிரதமர் மோடி தெரிவித்தார்.india tamilnews prime minister narendra modi’s victory next election

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில், அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் சார்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அரசு கடமைப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள், ‘மெகா’ கூட்டணி அமைப்பது, இது முதன்முறையல்ல. அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக, அமையவிருக்கும் இக்கூட்டணி, ஒவ்வொரு முறையும், தோல்வியை தழுவியுள்ளது.

‘வளர்ச்சி; வேகமான வளர்ச்சி, அனைத்திலும் வளர்ச்சி’ என்பதே, எங்கள் அடிப்படை கொள்கை. நான்கு ஆண்டுகளாக, கடுமையாக உழைத்துள்ளோம்.

அடுத்த லோக்சபா தேர்தலில், எங்கள் சாதனைகளை, மக்களிடம் எடுத்துக் கூறுவோம். மக்கள் எங்களுடன் உள்ளனர்; எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலை விட, மாபெரும் வெற்றியை, அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.க கூட்டணி பெறும், அனைத்து சாதனைகளையும் தகர்க்கும் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம், மக்கள் பணத்தை கொள்ளை அடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவும்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றன. கும்பலாக சேர்ந்து, அப்பாவிகளை தாக்கி கொலை செய்யும் வன்முறை சம்பவங்கள் வருந்தத் தக்கவை.

இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தாலும், அதை ஏற்க முடியாது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபற்றி நானும், எங்கள் கட்சியினரும், தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறோம்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்வதில், எங்கள் அரசு எப்போதுமே கவனத்துடன் செயல்படுகிறது.

ஆனால், எதிர்கட்சிகள், இந்த விவகாரத்தை அரசியாலாக்கப் பார்க்கின்றன. இதற்கு, அவர்களின் விபரீத சிந்தனையே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :