அணில் குட்டிக்கு பயந்து பொலிசுக்கு அழைப்பு விடுத்த நபர்

0
279
Squirrel person called frightened police tamil news

ஜேர்மனியில் கார்ல்ஸ்ரூஹே என்ற நகரில் பொலிசுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னை அணில் குட்டி ஒன்று துரத்துகிறது என அச்சத்துடன் புகார் தெரிவித்துள்ளார்.(Squirrel person called frightened police tamil news)

இதனை தொடர்ந்து பொலிஸார் ரோந்து செல்லும் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர். ஆனால் புகார் தெரிவித்த நபரை உற்சாகமுடன் துரத்தி சென்ற அணில் குட்டி, ஒரு கட்டத்தில் சோர்வடைந்து நன்றாக உறங்கி விட்டது.

இதனால் அந்த நபர் நிம்மதி அடைந்து உள்ளார். அந்த அணில் குட்டியை பொலிஸார் மீட்டு பின் தத்தெடுத்து உள்ளனர். அதற்கு கார்ல் என பெயரும் வைத்துள்ளனர். அது விலங்கு மையம் ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அணில் குட்டியானது அதனுடைய தாயாரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அதனால் அது அந்நபரை தொடர்ந்துள்ளது. இதுபற்றி பொலிஸ் நிர்வாகத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கிரென்ஜ் கூறும்பொழுது, தங்களது தாயாரிடம் இருந்து தொலைந்து போகும் அணில் குட்டிகள் பின்னர் மற்ற நபரின் மீது தனது கவனத்தினை செலுத்த தொடங்கி விடுகிறது என கூறியுள்ளார்.

tags ;- Squirrel person called frightened police tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்