அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

0
575

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். Jaffna Atchuvely Industrial Area Development 100 million Budget Tamil News

இங்கு உரையாற்றிய அமைச்சர் , வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

வடமாகாணத்திலே 200 மில்லியன் ரூபா இந்திய உதவியுடன் 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை, மேலும் விரிவாக்கி வினைத்திறனை அதிகரிக்கும் வகையிலேயே, எமது அமைச்சின் அதிகாரிகள் தற்போது திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.

வடமாகாணத்தின் முன்னோடியானதும், பிரமாண்ட அளவிலானதுமான அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில், இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தித் துறையையும் இலக்காகக் கொண்டு எமது செயற்திட்டங்களை நாம் உள்வாங்கியுள்ளோம்.

அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் முதலீட்டாளர்களும், உற்பத்தியாளர்களும் முதலீடு செய்து புதிய தொழிற்துறைகளை ஆரம்பிக்குமாறும், அதன்மூலம் உச்ச இலாபத்தையும், பயனையும் பெற்றுக்கொள்ளுமாறும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

2014 ஆம் ஆண்டு இந்த தொழில் பேட்டையை ஆரம்பிக்க உதவிய இந்தியாவுக்கு எமது அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்தக் கைத்தொழில் கண்காட்சித்தொடரானது, இலங்கை உற்பத்தியாளர்களை இந்தத் துறையில் ஊக்குவிப்பதற்கு வழிவகுக்குமென நான் நம்புகின்றேன்.

அத்துடன், மூலவள விநியோகஸ்தர்கள், கருவிகள் உற்பத்தியாளர்கள், இயந்திராதிகள் மற்றும் உபகரண உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்களுடன் கைத்தொழிற்துறை சார்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கிடையிலான வலுவான உறவுப் பிணைப்பை உருவாக்குமென்பது எனது நம்பிக்கையாகும் என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites