கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

0
970
Woman killed sharp weapon attack

கொட்டாவை சிறிமல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள 2 மாடி வீடொன்றில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். (Woman killed sharp weapon attack)

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 55 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக கொட்டாவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் மகளும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகள் வழங்கிய தகவலுக்கமைய அவளுடைய காதலனான தனியார் பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Woman killed sharp weapon attack