போலி மருந்து விநியோகஸ்தர்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

0
541
Roundup activity fake medicine distributors

போலி மருந்து வகைகளை இறக்குமதி மற்றும் விநியோகம் செய்வோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. (Roundup activity fake medicine distributors)

மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை, உணவு மருந்துகள் பரிசோதகர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து போலி மருந்து வகைகளை விநியோகம் செய்வோரை சுற்றிவளைக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்புக்களின் போது, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகளில் போலி மருந்து வகைகள்கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கம்பஹா, பியகம, தொம்பே உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்குகின்ற போலி வைத்தியர்கள் சம்பந்தமாகவும் சுகாதார அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலும் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், அனைத்து தனியார் வைத்தியர்களும் தமது தனியார் வைத்திய நிலையங்களை வைத்திய ஒழுங்குமுறை அதிகார சபையில் கட்டாயம் பதிய வேண்டும் என்றும் அவர் வைத்தியர்களைப் பணித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Roundup activity fake medicine distributors