கொழும்பின் பிரதான பகுதியில் விபசார நிலையம் : வெளிவந்த உண்மைகள்

0
656
தமிழன் பிரசன்னா

மசாஜ் நிலையம் எனும் போர்வையில் கொள்ளுப்பிடிய பிரதேசத்தில் கட்டிடமொன்றில் இயங்கிக்கொண்டிருந்த விபசார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். Police Round Up Prositution Kollupitiya

இதன்போது 07 வெளிநாட்டு பெண்களுடன், இரண்டு இலங்கை பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளோரில் தாய்லாந்தைச் சேர்ந்த 03 பெண்களும், வியட்நாமைச் சேர்ந்த 02 பெண்களும், சீனாவைச் சேர்ந்த 02 பெண்களும்,இரண்டு இலங்கை பெண்களும் உள்ளனர்.

மேலும் இந்த விபசார விடுதியின் உரிமையாளரான சீன பிரஜை ஒருவரையும், அதன் முகாமையாளரான 28 வயதான இலங்கை பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் வெளிநாட்டு பெண்கள் 9,000 ரூபாயும், இலங்கைப் பெண்கள் 5000 ரூபாயும் அறவிட்டுள்ளனர்.

வெளிநாட்டு பெண்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து விபசார தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.