இங்கிலாந்தின் வட மேற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள திவின் நகரில் பெருவெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி பின்னர் பெரும் முயற்சியால் காப்பாற்றப்பட்டவர் 16 வயதானபிளேக் வார்டு கடந்த செவ்வாய் அன்று நடந்த இந்த விபத்தை அடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பிளேக் வார்டு உயிர் காக்கும் கருவிகளின் துணையுடன் சிகிச்சை பெற்றுவந்தார்.UK girlfriend farewell during her last breath
இந்த நிலையில் அவரது தலையில் ஏற்பட்ட காயம் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க வைத்துள்ளது. இனிமேலும் அவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், அவரது உயிர் காக்கும் கருவிகளை அகற்ற பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையில் பல சிகரங்களை தொட பேராவல் கொண்டவர் பிளாக் ஆனால் அவை அனைத்தும் ஒரே ஒரு விபத்தால் தலைகீழாக மாறியுள்ளது. இன்று பிளாக் தங்களுடன் இல்லை என்பதே நம்ப முடியவில்லை என உருக்கமாக ஸ்டிபைனி பதிவு செய்துள்ளார்.
இதனிடையே உயிர் காக்கும் கருவிகளை அகற்றும் முன்னர் தமது காதலருக்கு கடைசியாக பிரியாவிடை கூறிய ஸ்டிபைனி தமது காதலருக்கு பிடித்தமான உடையில் மருத்துவனை வந்து அவர் படுக்கையில் அவரை கட்டியணைத்தபடி கண்ணீர் விட்டு கதறியுள்ளார். குறித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஸ்டிபைனி இந்த நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாதது மட்டுமல்ல, மிகவும் கடினமான நாளும் கூட என்றார்.
tags :- UK girlfriend farewell during her last breath
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- பிரித்தானியாவில் பச்சை குத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
- பிரித்தானியாவில் மாயமான பெண் 8 நாட்களுக்கு பின்னர் சடலமாக கண்டுபிடிப்பு: 3 பேர் கைது
- பிரித்தானியாவில் உலகிலேயே மிக நீளமான வெள்ளரிக்காயை பயிரிட்டு சாதனை படைத்த இந்திய விவசாயி
- இங்கிலாந்தில் விற்பனையாகும் பிளாஸ்டிக் முட்டைகோஸ்
- இங்கிலாந்து வங்கியின் வட்டி வீதம் அதிகரிப்பு
- செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்த முதல் பிரிட்டன் வீராங்கனை