கணவருடன் இணைந்து நடிக்கும் சிம்ரன் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

0
321
Simran husband act Tamil movie tamil news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்சத்தில் இருந்த நடிகை சிம்ரன், திருமணத்திற்கு பிறகு தற்போது திரையுலகில் ரி – என்ட்ரி கொடுத்துள்ளார்.Simran husband act Tamil movie tamil news

ஜோக்கர் பட ஹீரோ குரு சோமசுந்தரம், லட்சுமி ப்ரியா இணைந்து நடித்துள்ள ”ஓடு ராஜா ஓடு” என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர்களான நிஷாந்த் மற்றும் ஜத்தின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரனின் கணவர் தீபக் பக்காவும் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், ஆனந்த் சாமி, ஆஷிகா சல்வான், ரவீந்திர விஜய், அபிஷேக், நவீன் பவுல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படத்தின் இயக்குனர்களான நிஷாந்த் எடிட்டிங் பணிகளையும் ஜத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் சேர்த்து செய்துள்ளனர். டோஸ் நந்தா என்பவர் இசையமைத்துள்ளார்.

குரு சோமசுந்தரம் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்லும் போது என்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்ற ஒரு நாள் கதையை விறுவிறுப்பும் சுவாரஷ்யமும் குறையாமல் படமாக்கியுள்ளனர். மேலும் இந்த படம் லட்சுமி ப்ரியாவிற்கு முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விஜய் மூலன் அவர்கள் தயாரித்துள்ள இந்த படத்தை கேண்டில் லைட் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 17-ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

<<MOST RELATED CINEMA NEWS>>

இன்று மாலை சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த தகவலை வெளியிடும் படக்குழு..!

கண்ணீருடன் ரசிகர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற மீனாட்சி..!

வாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..!

கவர்ச்சிப் புகைப்படங்களை அள்ளி வீசும் எமி : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..! (படம் இணைப்பு)

ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!

வேறு வழியின்றி சமந்தாவை திருமணம் செய்தேன் : நாக சைதன்யா பகீர் தகவல்..!

விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!

12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..!

Tags :-Simran husband act Tamil movie tamil news