கிரான் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு !

0
588
weapons recovered batticaloa kiran

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள நூறு ஏக்கர் தவனைக்கண்டம் என அழைக்கப்படும் வயல்வெளி பிரதேசத்தில் இன்று காலை ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.(weapons recovered batticaloa kiran,Tamilnews)

இதன்போது எல்.எம்.ஜீ.-01. டி.56 வகை துப்பாக்கி 01 என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் வசிக்கும் காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர் தமது வயலில் வரப்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது மர்மப் பொருள் ஒன்று தெரிவதனை அறிந்து வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என அறிந்து அவற்றினை மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:weapons recovered batticaloa kiran,weapons recovered batticaloa kiran,