இன்று! (Today Horoscope 04-08-2018)
விளம்பி வருடம், ஆடி மாதம் 19ம் தேதி, துல்ஹாதா 21ம் தேதி,
4.8.18 சனிக்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:08 வரை;
அதன்பின் அஷ்டமி திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:54 வரை;
அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
பொது : தேய்பிறை அஷ்டமி விரதம், பைரவர், சனீஸ்வரர் வழிபாடு.
மேஷம்:
உங்கள் எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். மற்றவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு வெகுமதி பெறுவர்.
ரிஷபம்:
செயல்களில் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் விழிப்புடன் ஈடுபடவும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். மனைவி உதவிகரமாக நடந்து கொள்வார்.
மிதுனம்:
முக்கியஸ்தரின் அன்பை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். வருமானம் அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்த கலையம்சம் உள்ள பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித் தரும்.
கடகம்:
அன்பு வழியில் பிறருக்கு நன்மை செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசைப்பாடலை ரசித்து மகிழ்வீர்கள்.
சிம்மம்:
முன்யோசனையுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத திடீர் செலவும் ஏற்படும். சூழ்நிலை தொந்தரவால் நித்திரை கெடலாம். மாணவர்களுக்கு படிப்பில் தகுந்த கவனம் வேண்டும்.
கன்னி:
உங்களின் தேவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். பிள்ளைகளின் திறமைமிகு செயல் மனதை மகிழ்விக்கும்.
துலாம்:
நண்பரிடம் கேட்ட உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.
விருச்சிகம்:
எவரிடமும் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சாதகமான சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சுமாரான பணவரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். பிள்ளைகளால் உதவி உண்டு.ம்.
தனுசு:
சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும்.சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் நல்லது..
மகரம்:
பிறருக்கு உதவுகின்ற எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அனுகூலம் உருவாகும். பணவரவில் நல்ல முன்னேற்றம் உண்டு.குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.இளமைக்கால இனிய நினைவு மகிழ்ச்சி தரும்.
கும்பம்:
சுற்றுப்புறச்சூழ்நிலை தொந்தரவு தரலாம். பணிகளில் திட்டமிட்டு ஈடுபடுவது நல்லது.தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும்.கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள்.வளர்ப்பு பிராணிகளிடம் விலகி இருக்கவும்.
மீனம்:
மனதில் ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். பகைவரால் உருவான கெடுசெயல் பலமிழந்து போகும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் .லாபம் திருப்திகரமாக இருக்கும். பணக்கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள்.
மேலும் பல சோதிட தகவல்கள்
-
உங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா
-
பல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…!
-
பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
-
வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
-
இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
-
காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
-
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
-
உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
-
வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்