நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பிற்கு இராஜாங்க அமைச்சர் ஒருவரும் எதிர்ப்பு

0
352
agreement Sri Lanka Singapore signed regular basis ajith perera

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பிற்கு இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரோ எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். state minister ajith p perera agai increase salary parliament members

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், மக்களிடம் இருந்து அறவிடப்படும் பணத்தில் இருந்து கடனை அடைக்க முற்படும் நிலையில், இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்புக்கு தாம் முழுமையாக எதிர்ப்பை வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த அரசாங்கம் எப்போதுமே மோசமான செயற்பாடுகளிலேயே ஈடுபடுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது நாட்டு மக்களுக்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதன அதிகரிப்பு என்பது சாதாரண விடயமல்ல.

அதற்கு எதிராக தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை வேதன அதிகரிப்பிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
state minister ajith p perera agai increase salary parliament members

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites