ஆணொருவரை நம்பி ஏமாற்றமடைந்த பெண்ணொருவரின் சோகக்கதை

0
678
Man cheats woman Matrimony

35 மதிக்கத்தக்க பெண் பொறியாளர், ஆசை வார்த்தைக் கூறியதால் தன்னுடைய ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார். Man cheats woman Matrimony

மோசடி செய்த நபர் மிகவும் பழைய ஏமாற்று வித்தையை பயன்படுத்தியுள்ளார். அதாவது விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டதாகவும், பணம் கொடுத்தால் தன்னை விட்டுவிடுவர் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அப்பெண் பொறியாளர், தன்னுடைய முழு சேமிப்புத் தொகை, நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.22.54 லட்சத்தை அளித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய அழைப்புகளை எடுக்க மறுத்ததன் மூலம், தான் ஏமாற்றப்பட்டதை அப்பெண் உணர்ந்துள்ளார். உடனே தெஹு சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே அடுத்த ராவெத்தில் வசித்து வரும் இப்பெண், மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் திருமணத்திற்கான இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்திருந்தார். ஒரு மாதத்திற்கு முன், மோசடி செய்த நபர் தான் மருத்துவ பயிற்சியாளராக லண்டனில் தங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு தனது திருமண விருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் குறுந்தகவல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு வந்துள்ளனர். இந்த சூழலில் ஜூலை 23ஆம் தேதிக்கு இந்தியா வரவுள்ளதாகவும், அப்போது திருமணம் குறித்து முடிவெடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டதாக கூறி, பணம் பெற்றுள்ளார். பின்னர் 4 நாட்கள் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மோசடியாளரின் தங்கைகளுக்கும் தொலைபேசியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து மும்பை விமான நிலையத்தில் விசாரித்த போது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.