குரோத மனபான்மையை விட்டு சிறப்பான ஆட்சியை முன்னெடுக்கவும் – சீ.பீ.ரத்நாயக்க கோரிக்கை

0
394
joint opposition accused United States immigrant organizations Sri Lanka

(joint opposition accused United States immigrant organizations Sri Lanka)

இலங்கையில் புதிய ஆட்சியை ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் 585 மில்லியன் டொலரை வழங்கியதாக கூட்டு எதிரணியின் குற்றம்சுமத்தியுள்ளது.

அந்த அணியின், நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்க கொத்மலை, பூண்டுலோயாவில் இன்று (04) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த நிதியை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா வழங்கியதாக, ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதாவது change in srilanka என்பதற்கு அமையவே இந்த நிதி வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், இலங்கை போன்ற சுயாதீன நாட்டில் தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.

தற்போது சீனா, இந்தியா போன்ற நாடுகளில் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள அமெரிக்கா கோட்டபாய இரட்டை குடியுரிமை பெற்றவர் அதனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

முதுகெலும்பு இல்லாத ஆட்சியாளர்களை இலங்கையில் ஏற்படுத்தி, இலங்கையை கைப்பற்றிக்கொள்ளும் எண்ணத்திலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.

வாகன விலையேற்றம் அதிகரித்துள்ளதை ஏற்க முடியாது. கொழும்பு நகரில் கடுகதி ரயில் போக்குவரத்தை ஆரம்பித்த பின்னர் வாகன விலையை குறைப்பதாக அரசாங்கம் பொய் கூறிவருகின்றனர்.

பிரதமர் ரணிலின் மூளை குழப்பமடைந்துள்ளதால் அவர், இவ்வாறான முடிவுகளை எடுக்கின்றார். அவர்கள் எல்லாவகையான காட்டிகொடுப்புகளை தற்போது அரங்கேற்றி வருகின்றனர்.

மத்தள விமான நிலையத்தை விற்கவும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றுள்ளதாகவும் தற்போது ஒலுவில் துறைமுகத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சுமத்தினார்.

ஆகவே 100 நீதிமன்றங்களை அமைத்து சிறைகளில் அடைத்தாலும் இந்த போராட்டத்தை நிறுத்த போவதில்லை எனவும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை எனவும் அவர் கூறினார்.

தற்போதைய ஜனாதிபதியின் பெயரில் மைத்திரி என்ற இரக்க குணம் காணப்பட்டாலும் அவரிடம் அவ்வகையான குணம் இல்லை, மாறாக பொறாமை, பலி வாங்கும் எண்ணம் போன்றவையே மேலோங்கி காணப்படுகின்றது.

எனவே குரோத மனபான்மையை விட்டு சிறப்பான ஆட்சியை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றேன் என்றார் அவர்.

(joint opposition accused United States immigrant organizations Sri Lanka)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites