ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 57 வயது மிக்க நபர் கடந்த மாதாம் 27-ம் தேதி உடலில் 40 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட தடயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, முறையே 17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று மகள்களையும் பொலிஸார் தீவிர விசாரணைக்கு உள்படுத்தியுள்ளனர்.3 daughters harassing father Kill interrupted studying Russia
விசாரணைக்கு பின்னர் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படிக்கவிடாமல் எந்த நேரமும் வீட்டு வேலைகளை செய்யுமாறு அவர் தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளதாகவும், ஆயுதங்களால் தாக்கியுள்ளதாகவும் 3 சகோதரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 28 வரை மூன்று சகோதரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூவருக்கும் குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
tags :- 3 daughters harassing father Kill interrupted studying Russia
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- புவியில் வீழ்ச்சியடைந்து வரும் கிங் பென்குயின் குடித்தொகை
- அழகு தமிழில் சீன சுவர் பற்றி விளக்கமளிக்கும் சீன பெண் – வீடியோ
- பங்குச்சந்தையில் அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!!
- உலகம் முழுவதும் பிரபலமாகும் ‘மோமோ’ சவால் இளம் வயதினர் அவதானம்
- அபூர்வ தோல் நோயினால் பிளீச்சிங் போட்டு குளிக்கும் குழந்தை
எமது ஏனைய தளங்கள்