பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகத்தில் அனுமதியில்லாத துப்பாக்கிகள்!

0
490
Unanswered guns France's presidential office

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் கட்சி அலுவலகத்திலிருந்து, பயன்படுத்த அனுமதி இல்லாத துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Unanswered guns France’s presidential office

மக்ரோனின் மெய்பாதுகாவலர் Alexandre Benalla, ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவரை மோசமாக தாக்கிய காணொளி வெளியானதன் பின்னர், சனிக்கிழமை, ஜூலை 21 ஆம் திகதி பரிஸிலுள்ள மக்ரோனின் La République En Marche கட்சி அலுவலகம் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது.

அதன்போது காவல்துறையினர் மூன்று துப்பாக்கிகளை மீட்டனர். இதனால் பாதுகாப்பு அதிகாரி Vincent Crase கைது செய்யப்பட்டு, காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த மூன்று ஆயுதங்களுக்கும் அலுவலகத்தில் போதிய அனுமதி ஆவணங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று ஆயுதங்களும் அலுவலகத்தின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுதங்களுக்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Alexandre Benalla விவகாரம் அடங்குவதற்கு முன்னர் மீண்டும் தொடர்ச்சியாக சர்ச்சைகள் மக்ரோன் மீது சுமத்தப்பட்டு வருவது அவரின் செல்வாக்கை சரிக்கும் முயற்சிகள் என அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

tags :- Unanswered guns France’s presidential office

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்