வரலாற்று நிகழ்வு இன்று : கொழும்பு பல்கலைக்கழக மைதானத்திற்கு வருமாறு அனைவருக்கும் அழைப்பு

0
528
Telescopes Colombo Uni. open public watch Planet Mars today
Telescopes Colombo Uni. open public watch Planet Mars today

செவ்வாய்க்கிரகம் தனது அண்டவெளி சுற்றுப்பாதையில் பூமியை அண்மித்துள்ள நிகழ்வை பார்வையிட கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3விசேட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.(Telescopes Colombo Uni. open public watch Planet Mars today,Tamilnews, Srilanka Tamilnews)

செவ்வாய்க்கிரகம் பூமியை அண்மிக்கும் இவ்வாறான அதிசயம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பெறுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை விண்ணை பரிசோதிக்க முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை பல்கலைக்கழகத்தின் பாரிய அளவிலான தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி பார்வையிடமுடியும்.

இதேவேளை பொலன்னறுவை விஜித மத்திய மகாவித்தியாலயத்தில் மற்றுமொரு விண்ணை பார்வையிடும் முகாம் நாளை(1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி திருகோணமலை சிங்கள மத்திய மகாவித்தியாலயத்தில் இரவு 7 மணிமுதல் 9 மணிவரை இந்த முகாம் அமைக்கப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக நட்சத்திர விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை பார்வையிட விரும்புவோர் கலந்துகொள்ளமுடியும் என்றும் இன்றைய தினம் செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 57.6 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் பூமியை கடக்கும் என்றும் பௌதீக விஞ்ஞானவியல் பிரிவின் நட்சத்திர மற்றும் விண்வெளி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Telescopes Colombo Uni. open public watch Planet Mars today,Telescopes Colombo Uni. open public watch Planet Mars today,Telescopes Colombo Uni. open public watch Planet Mars today