புகையிரத தண்டவாளங்களை திருடிய சந்தேகநபர்கள் கைது

0
391
TAMIL NEWS old railway track robbers arrested trinco kandale

(TAMIL NEWS old railway track robbers arrested trinco kandale)

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் புகையிரத தண்டவாளத்தை திருடிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் வாத்தியாகம மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 26 வயதுடைய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

புதிய தண்டவாளத்திற்கு அருகில் கழற்றி வைக்கப்பட்டிருந்த பழைய தண்டவாளங்களையே குறித்த சந்தேக நபர்கள் திருடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் பழைய இரும்புக்காக அவற்றை திருடி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சிக்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(TAMIL NEWS old railway track robbers arrested trinco kandale)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites