கலைஞர் கருணாநிதி கவலைக்கிடமாக உள்ளார்! மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் சென்றார்!

0
733
TAMIL NEWS Karunanidhis Health Improved Says Son MK Stalin

(TAMIL NEWS Karunanidhis Health Improved Says Son MK Stalin)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து கோபாலபுரத்துக்கு சென்றுள்ளார்.

மு.க.ஸ்டாலின் நேற்று தனது ஆழ்வார்பேட்டை இல்லதிற்கு சென்ற நிலையில் தற்போது மீண்டும் கோபாலபுரத்துக்கு சென்றுள்ளார்.

காவேரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழுவும் கோபாலபுரம் சென்றுள்ளனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோரும் அங்கு சென்றுள்ளனர்.

நேற்றைய தினத்தை விட கலைஞருக்கு இன்று நோய்தொற்று குறைந்துள்ளதாகவும், காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் தற்போது ஏராளமான திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் பெரும் பதட்டத்துடன் கோபாலபுரம் வீட்டின் முன் திரண்டுள்ளனர்.

(TAMIL NEWS Karunanidhis Health Improved Says Son MK Stalin)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites