இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே ஒஸ்ரியாவிற்கு விஜயம்

0
317
UK Prime Minister Teresa visited Mayor Osia

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வகையில் பிரதமர் தெரேசா மே கோடை விடுமுறைக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஒஸ்ரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (UK Prime Minister Teresa visited Mayor Osia)

அங்கு ஒஸ்ரிய அதிபர் செபஸ்ரியன் குர்ஸை சந்திக்கவுள்ள பிரதமர் மே, அவருடன் பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

பிரெக்சிற்றிற்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் எதிர்கால உறவு தொடர்பான இங்கிலாந்தின் திட்டத்தை வெற்றிக் கொள்வதற்கான ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில், ஒஸ்ரிய அதிபர் மற்றும் செக் குடியரசின் பிரதமருடனும் மே கலந்துரையாடவுள்ளார்.

இங்கிலாந்தின் புதிய பிரெக்சிற் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சியில் இங்கிலாந்து அமைச்சர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவ்வாறான முயற்சிகளில் ஒன்றாகவே பிரதமரின் இந்த ஒஸ்ரிய விஜயமும் அமைந்துள்ளது.

ஒஸ்ரியாவிற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் மே, ஒஸ்ரிய அதிபரின் அழைப்பின் பேரில் ஒஸ்ரியாவின் நான்காவது பெரிய நகரான சல்ஸ்பர்க்கில் நடைபெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- UK Prime Minister Teresa visited Mayor Osia

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************