கருணாநிதி உடல்நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் : பிரதமர் மோடி

0
952

கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் தொடர்பு கொண்டு பேசினேன் என பிரதமர் ட்விட்டர். india tamil news pray Lord karunanidhi health pm.modi

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுநீரகத் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கோபாலபுரம் வந்து கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் டிவிட்டரில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

india tamil news pray Lord karunanidhi health pm.modi

இதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திரமோடி, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொடர்பு கொண்டு பேசினேன். தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் கூறினேன்.

மேலும், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :