உணவு மற்றும் மருந்து பொருட்களை சேமிக்கும் பிரிட்டன்

0
304

உணவு மற்றும் மருந்து பொருட்களை சேமித்து வைக்கும் திட்டமானது, அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுகிறது என்பதையே சுட்டிக்காட்டுவதாக, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். (Britain store food pharmaceutical products)

உணவு மற்றும் மருந்து பொருட்களை சேமித்து வைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் மாத்திரமே உள்ளன.

இந்நிலையில், உடன்பாடற்ற பிரெக்சிற் ஏற்படின் அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். அதற்காகவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எவ்வாறாயினும் சிறந்த உடன்பாடொன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு சாத்தியமான பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம்.

ஆனால் அரசாங்கத்தின் உணவு பொருட்களை சேமித்து வைக்கும் திட்டத்தை வைத்து உடன்பாடற்ற பிரெக்சிற் பாரதூரமாக அமையும் என்ற வகையில் சிலர் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இதனை அச்சுறுத்தலாக நோக்காது மக்களின் தேவையையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்துவதற்கான செயற்பாடாக கருத வேண்டும்” என பிரதமர் தெரிவித்தார்.

tags :- Britain store food pharmaceutical products

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************