Toronto பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து, தீவிர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த 10 வயது சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார். Toronto shotgun victims identified
ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22ஆம் திகதி) குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 18 வயதான Reese Fallon எனும் பெண் ஒருவர் நண்பர்களுடன் வெளியே வந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டினால் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயமடைந்திருந்தனர். அத்துடன் 29 வயதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டார்.
குறித்த 10 வயது சிறுமியின் தந்தை இச்சம்பவத்தில் காயமடைந்த போதிலும், அதன் வலியை பொறுத்து கொண்டு அச்சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி Julianna Kozis, மார்கம் (margam) பகுதியைச் சேர்ந்தவர் என ரொறன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மார்கம் மேயர் Frank Scaripitti இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
மேலும் குறித்த துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
tags :- Toronto shotgun victims identified
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- கனடாவில், 20 வயது இளம்பெண்ணிற்கு ரிச்மண்ட் பகுதியில் நடந்த கொடூரம்!
- பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!
- லாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்!!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.