பழைய முறையிலேயே மாகாணசபை தேர்தல் – ஐதேக தலைமை தீர்மானம்!

0
436
Provincial Council Elections UNP Decided Old Method

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறைமையின் கீழே நடத்த வேண்டும் என பல சிறுப்பான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். Provincial Council Elections UNP Decided Old Method Tamil News

மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நேற்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களுக்கு தேர்தல் நடத்துவதாயின் டிசம்பரில் தேர்தல் நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்றது. இதல் கருத்து தெரிவிக்கும் போதே ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணை குறித்தும் அவர் மீது கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று விசாரணை குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites