மனித புதைக்குழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள்..!

0
501
manner human body parts recover decide financial help latest news

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய அகழ்வு பணிகளின் போது கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  (Monks Mannar human skeletons unearthed, Tamilnews)

மன்னார் நீதவான ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஸ விடுமுறையில் சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் திஸநாயக்க தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரைக்கும் 32 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள 52 மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Monks Mannar human skeletons unearthed,Monks Mannar human skeletons unearthed,Monks Mannar human skeletons unearthed,