Israel announced shot Syrian warplane midleeast Tamil news
தங்கள் வான்எல்லைக்குள் பறந்த சிரிய போர் விமானம் ஒன்றை நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிக்குழுக்களை ஒடுக்குவதற்காக கோலன் ஹைட்ஸ் (Golan Heights) என்ற இடத்தின் மீது சிரியாவின் சுகோய் ரக போர் விமானம் ஒன்று பறந்து சென்றது.
அப்போது அது இஸ்ரேல் வான்எல்லைக்குள் அத்துமீறிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனது வான் பாதுகாப்பு மையத்தில் இருந்து இரண்டு பேட்ரியாட் ரக ஏவுகணைகளை வீசி சிரிய போர் விமானம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த விமானம் முற்றிலும் தகர்க்கப்பட்டது.