(TAMIL NEWS mathala airport india magampura harbour china)
இராஜதந்திர நகர்வால் ஏற்பட்ட விளைவாக மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையத்தை இந்தியாவிற்கு கையளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
இலங்கையின் இந்த வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று (25) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர், ”ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த அரசாங்கம் பெற்றக் கடனை மீள செலுத்துவதில் சிரமம் இருக்கிறது.
இந்தத் திட்டங்களினால் வருமானம் கிடைக்கப் பெறவில்லை. நட்டத்தை எதிர்கொள்வது பெரும் சிரமமாக இருந்தது.
நட்டத்தை எதிர்கொள்ள மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிக்க நேரிடும். அதனை மேற்கொள்ளாது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கினோம்.
மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்தோம். இதன்மூலம் இராஜதந்திர ரீதியான சிக்கலும் தவிர்க்கப்பட்டுள்ளது.”
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் அமைக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாகும்.
இருப்பினும் அதனை எவ்வித திட்டமும் இன்றி அமைத்ததே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்க ஆரம்பித்திருந்தால் அது இப்போது மிகவும் வேலைப்பளு மிக்க துறைமுகமாக இருந்திருக்கும்.
கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டிருந்தால் அதன் வருமானம் சீனாவிற்கும் அதற்கான அந்நியச் செலாவணி இலங்கைகக்கும் கிடைத்திருக்கும்.
மத்தள விமான நிலையத்திற்காக 26,500 மில்லியன் செலவழித்துள்ளதாகவும் விமான நிலையத்தை அமைத்த போதே சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றையும் அமைத்திருந்தால் விமானங்கள் அங்கு தரையிறக்கப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐம்பதாயிரம் வீடுகள்!
வடக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணியை சீனாவிற்கு வழங்குவதற்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த இதன்போது தெரிவித்தார்.
மரண தண்டனை
அதேவேளை,எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன குறிப்பிட்டார்.
மரண தண்டனையை அமுல்படுத்தினால் GSP வரிச்சலுகை இல்லாமல் போகுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த சலுகை இல்லாமல் போனலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு துணையாக இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காலி விளையாட்டரங்கு
காலி விளையாட்டரங்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கட்டிடங்களை அகற்ற இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பதிலளித்துள்ளார்.
விஷேட மேல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நடத்தி செல்வதற்கான இடம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(TAMIL NEWS mathala airport india magampura harbour china)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்