இந்த வாரம் விண்ணில் தோன்றும் இரண்டு அபூர்வ நிகழ்வுகள்!!

0
1130
July 2018 Mass Readings Blood Moon Lunar Eclipse

(July 2018 Mass Readings Blood Moon Lunar Eclipse)

இந்த நூற்றாண்டின் நீண்ட முழுமையான சந்திர கிரகணத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை மக்கள் பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும் நிலையில், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் தென்படும்.

ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்து சமுத்திரம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைத் தெளிவாகப் காண முடியும்.

2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட மத்திய சந்திர கிரகணத்தின் பின்னர் ஏற்படும் நீண்ட முழு சந்திர கிரகணமாக இது கருதப்படுகிறது.

எதிர்வரும் 27 ஆம் திகதி Blood Moon ஏற்படும் “இரத்த நிலவு” சந்திர கிரகணமானது ஒரு மணித்தியாலமும் 43 நிமிடங்களும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஆரம்பம் முதல் முடிவுவரை சுமார் 4 மணித்தியாலங்கள் வானத்தில் வித்தியாசமான நிகழ்வுகளை காண முடியும்.

சந்திர கிரகணம் இடம்பெறும் தருணத்தில், செவ்வாய் கிரகம் நேர் எதிர்க்கோட்டில் செல்லும்போது அதன் பிரகாசமும் தென்படவுள்ளமை கூடுதல் சுவாரஸ்மான நிகழ்வாக இருக்கும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிவப்பு நிறம் கொண்ட கோள் பூமிக்கு மிகவும் அருகில் தெரியும்.

அது மாத்திரமன்றி இரவு முழுவதும் சந்திரன் மிகவும் பிரகாசமாகவும் இருக்கும் என்பது கணிப்பு.

நடுத்தர அளவு தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி சந்திரனை நோக்கினால் சிவப்பு நிற பள்ளங்களை பார்க்க முடியும் என இலங்கை கோள் மண்டலம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (27) இரவு 10.45 மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகும். மறுநாள் 28 ஆம் திகதி அதிகாலை 4.58 மணிவரை பூமியின் நிழல் சந்திரனில் தென்படும்.

வெற்றுக்கண்ணால் பார்க்க விரும்புபவர்கள் இரவு 11.45 மணிக்கு பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதைப் காண முடியும்.

முழுமையான சந்திர கிரகணம் 28 ஆம் திகதி அதிகாலை 1 மணிக்கு தென்படும். அதிகாலை 1.51 பூரணமான சந்திரகிரகணம் தெரியும் என பேராசிரியர் ஜயரட்ன தெரிவித்தார்.

100 வருடங்களின் பின்னர் தோன்றும் நீண்ட முழு சிவப்பு சந்திரனாகவும் இது அமையவுள்ளது. சாதாரண சந்திரனைவிட 40 மடங்கு பெரியதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

(July 2018 Mass Readings Blood Moon Lunar Eclipse)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites