ஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி வரும் சவுதி !

0
578
Saudis ready Haj pilgrim medical services midleeast Tamil news

எதிர்வரும் ஹஜ் காலத்தின் போது யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக சவுதி செம்பிறைச் சங்கம் (Red Crescent) முழுவீச்சில் தயாராகி வருகிறது. மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், தொழிற்நுட்ப நிபுணர்கள், நிர்வாகிகள் என இதுவரை சுமார் 2,631 பேர் மக்கா மற்றும் மதினாவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் மினா, முஜ்தலிபா, அரபாத் மற்றும் புனிதத் தலங்களின் சாலைகளில் 69 ஆம்புலன்ஸ் சேவை மையங்களையும், மதினா மற்றும் மதானி ஹரம் மண்டலத்தில் 21 ஆம்புலன்ஸ் சேவை மையங்களையும், பல்வேறு விமான நிலையங்கள், தரைவழி உள்நுழைவு மையங்களில் 10 ஆம்புலன்ஸ் சேவை மையங்களையும் திறந்துள்ளது சவுதி செம்பிறைச் சங்கம்.

Saudis ready Haj pilgrim medical services midleeast Tamil news