இராட்சத மர்ம உயிரினமொன்று கரையொதுங்கியது: அழிவுகளின் அறிகுறியா?

0
776
Phillipines Mystery Creature

இரு மாதங்களில் மீண்டுமொரு தடவை கரையொதுங்கியுள்ள இராட்சத உயிரினமொன்றின் சடலம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Phillipines Mystery Creature

இதுவரை அடையாளம் காணப்படாத இந்த சடலம் மின்டோரோ தீவுப்பகுதியிலேயே கடையொதுங்கியுள்ளது.

சிலர் இது திமிங்கலம் எனத் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதமும் இதேபோன்ற மர்ம உயிரினமொன்றின் சடலம் பிலிப்பைன்ஸில் கரையொதுங்கியிருந்தது.

இவ்வாறு உயிரினங்கள் கரையொதுங்குவது பாரிய அனர்த்தங்களின் அறிகுறி என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது சுனாமி வருவதற்கான அறிகுறியென மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் பயந்ததைப் போல் அப்பகுதியில் மோசமான காலநிலை நிலவுவதாகவும் , பலர் உயிரிழந்துள்ளாதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.