(samsung galaxy tab s4 render reveals iris scanner intelligent scan features)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய டேப்லெட்டில் சாம்சங் கைரேகை ஸ்கேனர் வழங்காதது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சாம்சங் தனது புதிய சாதனத்தில் Iris-Scanner வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் வீடியோவில் டேப் எஸ்4 மாடலில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. கேலக்ஸி எஸ்9 அல்லது எஸ்9 பிளஸ் மாடலில் இன்டெலிஜன்ட் ஸ்கேன் செட்டப் செய்யும் அனிமேஷன் வீடியோவை மீண்டும் கேலக்ஸி டேப் எஸ்4 ஃபர்ம்வேர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
இன்டெலிஜன்ட் ஸ்கேன் அம்சம் Iris-Scanner மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்கிறது. இரு தொழில்நுட்பங்ளில் ஏதேனும் ஒன்று இயங்காவிட்டாலும் மற்றொன்று கட்டாயம் இயக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.