யாழ் கோட்டையில் இராணுவத்துக்கு இடமில்லை! தீர்மானம் நிறைவேறியது!

0
433

யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்திற்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ள கூடாதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Jaffna Fort No Military Purpose Motion Finished

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று இணைத்தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாண ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு இடம் வழங்கும் விடயம் தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர், உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,   கோட்டையில் இராணுவம் தங்குவதை அனுமதிக்க முடியாது என்று  வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன், புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டையை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட இணைத்தலைவர்கள், இவ்விடயம்தொடர்பில் மத்திய அரசிற்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites