மேலும் இரு வாரங்­க­ளுக்கு டெனீ­ஸ்வரனுக்கு அமைச்சு பதவி!

0
392
Deniswaran Ministerial Position Period Extended 2 More Weeks

தன்­னைப் பத­வி­யில் இருந்து நீக்­கி­ய­மைக்கு எதி­ராக டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மீது வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். Deniswaran Ministerial Position Period Extended 2 More Weeks

அந்த வழக்கை விசா­ரித்த நீதி­மன்று அமைச்­ச­ரைப் பதவி நீக்­கிய முறைமை தவறு என்­றும் அவர் தனது அமைச்­சுப் பத­வி­யில் தொட­ர­லாம் என்­றும் இடைக்­கா­லக் கட்­டளை பிறப்­பித்­தது.

இந்த இடைக்­கா­லக் கட்­ட­ளையை எதிர்த்து முத­ல­மைச்­சர் உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

வழக்­குக்­குத் தேவை­யான ஆவ­ணங்­க­ளின் மூலப் பிர­தி­களை அணைக்­கு­மாறு கட்­ட­ளை­யிட்­டது நீதி­மன்­றம்.

எனி­னும் முத­ல­மைச்­சர் தரப்பு இன்­ன­மும் தமது ஆட்­சே­ப­னையை முழுத் தாக்­கல் செய்­ய­வில்லை.

இதனையடுத்து கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், வடக்கு மாகாண சபை­யின் அமைச்­ச­ராக அதன் முன்­னாள் அமைச்­ச­ரான பா.டெனீஸ்­வ­ரனை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை அந்­தப் பத­வி­யில் தொடர்­வ­தற்­கான இடைக்­கா­லக் கட்­ட­ளையை நேற்­றுப் பிறப்­பித்­தது.

வடக்கு மாகாண ஆளு­நர் தரப்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று வழங்­கிய இடைக்­கா­லக் கட்­டளை தொடர்­பில் தங்­க­ளுக்கு ஆட்­சே­பனை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites