ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு

0
913
Colombo HC reissues notice President Maithripala Sirisena, Prime Minister

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. (Colombo HC reissues notice President Maithripala Sirisena, Prime Minister)

இவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக போலி ஆவணங்களை வெளியிட்டமையால் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Colombo HC reissues notice President Maithripala Sirisena, Prime Minister Ranil Wickremesinghe