அபுடாபியில் இந்துக்கோயில் நிர்மாணப்பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Abu Dhabi Hindu Temple Construction
இதற்கென சட்ட நிறுவனமொன்று அபுடாபி அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான விஜயத்தின் போது இந்த திட்டத்துக்கு அபுடாபி அரசு அனுமதியளித்தது.
தற்போது கோயில் நிர்மாணக் குழுவானது, நிர்மாணத்துக்கான சட்டரீதியான தேவைகளின் பொருட்டு ஆலோசகர்களை எதிர்வரும் ஒருமாத காலத்துக்குள் நியமிக்கவுள்ளது.
ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதும் அவர்கள் ஊடாக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது. இது உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் 7 இராச்சியங்களையும் பிரதிபலிக்கும் வகையில் 7 கோபுரங்களைக் கொண்டதாக இக்கோயில் அமைக்கப்படவுள்ளது. இது அல் ரஹாபா , பிரதேசத்தில் 14 ஹேக்கர் நிலப்பரப்பில் இக்கோயில் அமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் இக்கோயில் நிர்மாணப்பணிகள் நிறைவுசெய்யப்படவுள்ளது.