ஜப்பானில் வீசும் அனல் காற்று – 44 பேர் பலி

0
335
Japan Thermal wind 44 people die

ஜப்பான் நாட்டின் கிழக்கு ஆசியப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுக்கிறது. மேலும் அங்கு வீசி வரும் அனல் காற்று காரணமாக இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.Japan Thermal wind 44 people die 

ஜப்பான் நாட்டில் ஜூலை 9-ஆம் தேதியிலிருந்து தற்போது வரை வெயிலுக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த சனிக்கிழமை மட்டும் மத்திய டோக்கியோ பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைத்ததால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் முன்பு போல் எப்போதும் இல்லாத அளவிற்கு குமாகயா பகுதியில் 41 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெயில் கொளுத்தியுள்ளதாக சி.என்.என் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

கொளுத்தி வரும் வெயில் குறித்து ஜப்பான் வானிலை ஆய்வுமையம் கூறுகையில், ”ஜப்பான் நாட்டில் ஏற்படும் சராசரி வெப்பநிலையை விட 12 டிகிரி செல்சியஸ் கூடுதலாக தற்போது வெயில் வீசி வருகிறது. எரியும் வெப்பத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள போதுமான உபகரணங்களை பயன்படுத்தகொள்ள வேண்டும். பகல் நேரங்களில் மக்கள் வெளியேறுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.

முன்னதாக ஜப்பான் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து தற்போது கடுமையான வெயில் வாட்டி வருவதால் அந்நாட்டு மக்கள் பருவநிலை மாற்றம் குறித்து கடும் துன்பமுற்று வருகின்றனர்.

tags :- Japan Thermal wind 44 people die

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்