கள்ளக்காதலனுடன் படுக்கையில் தாய்! நேரில் கண்ட மகனை போட்டு தள்ளிய திகில் ஸ்டோரி!

0
922

இந்தியா திருச்சியை சேர்ந்த மீனாம்பாள் வயது 40, இவரது கணவர் 6 மாதத்திற்கு முன்பாக கேன்சர் நோயினால் இறந்துவிட்டார். India Trichy Mother Illegal Relationship Leads Son Murder

இவருக்கு அங்குராஜ் என்ற 14 வயதான மகன் இருக்கிறான். அவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அங்குராஜ், வீட்டில் மயங்கி வீழே விழுந்துவிட்டதாக பதறியடித்துக் கொண்டு மீனாம்பாளுடன் அவர் தோழி லட்சுமியும் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

ஆனால் டாக்டர்கள் அங்குராஜை பரிசோதித்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மகனின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த மீனாம்பாள் சடலத்தை கிடத்திக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார்.

ஆனால், அங்குராஜ் சாவில் மரணம் இருப்பதாக சோமரசம்பேட்டை ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மீனாம்பாள் வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த சடலத்தை கைப்பற்றினர். திருச்சி அரசு மருத்துவமனைக்கு அங்குராஜ் உடலை கொடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனையில், அங்குராஜ் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிரடியாக விசாரணையில் இறங்கிய போலீசார் தாய் மீனாம்பாள் மற்றும் லட்சுமியிடம் கிடுக்குப்பிடியை மேற்கொண்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

விசாரணையில், கொத்தனார் வேலை செய்யும் முத்தழகுவுடன் மீனாம்பாளுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கணவன் இல்லாததால் முத்தழகுவை தினமும் வீட்டுக்கு வரவழைத்து இருவரும் தண்ணி அடித்துவிட்டு, உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதுமட்டுமல்ல முத்தையனுக்கு இன்னொரு கள்ளக்காதலி இருக்கிறாராம். அதாவது மீனாம்பாள் தோழி லட்சுமி மீனாம்பாள் வீட்டுக்கு தினமும் ஆஜராவாராம்.

3 பேரும் சரக்கு அடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர். இப்படி தினமும் நடந்துகொண்டிருக்கையில், மீனாம்பாள் ஒருநாள் முத்தழகுடன் உல்லாசமாக இருப்பதை நேரடியாக பார்த்துள்ளார். இதனால் அம்மா மேல் அதிக பிரியமாக இருந்த அங்குராஜ் தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறான்.

பின்னர் இந்த விடயம் மகனின் மூலம் உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் மகனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளனர்.

அங்குராஜ் தூங்கபோகும்போது, குடிக்கும் பானம் ஒன்றில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து மீனாம்பாள் குடிக்க சொன்னார். அம்மா கொடுத்ததால் பேசாமல் வாங்கி குடித்துவிட்டு தூங்க சென்றுவிட்டான் மகன். சிறிது நேரம் கழித்து, மீனாம்பாளும், லட்சுமியும் அங்குராஜ் கழுத்தை கயிற்றால்

தன் பெற்ற மகனை அற்ப சுகத்துக்காக கை, கால்களை உதைத்துக்கொண்டு மகன் துடிதுடித்து சாவதை கண்குளிரப் பார்த்துள்ளார் மீனாம்பாள். பிறகு மகன் இறந்துவிட்டதை முத்தழகனிடம் சொல்லவும், முத்தழகனோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று டிராமா போட ஐடியா கொடுத்துள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த கள்ள காதல் கொலை சம்பவம் திருச்சியை ஆட்டம் காண வைத்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites