சீனாவின் தேசிய கீதத்துக்கு முன்னுரிமை! மைத்திரி கலந்து கொண்ட நிகழ்வில் சர்ச்சை!

0
527

கடந்த சனிக்கிழமை பொலநறுவையில் , சீனாவின் உதவியுடன், அமைக்கப்படவுள்ள 200 படுக்கைகளைக் கொண்ட சிறுநீரக நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. China National Anthem Got First Priority Maithri Participate Event

இந்த நிகழ்வில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.

குறித்த அரச நிகழ்வில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அரசாங்க நிகழ்வுகளில் முதலில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். அதன் பின்னரே, ஏனைய நாட்டின் தேசிய கீதம் பாடப்படும். ஆனால் இந்த நடைமுறைக்கு மாறான வகையில் குறித்த நிகழ்வில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நிகழ்வில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites