தேசிய அமைப்பாளர் பதவி தொடர்ந்தும் ராஜாராம் வசம்

0
365
upcountry people front national organisation Rajaram latest Tamil news

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாரம் மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் பதவியினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாற்கான அனுமதியினை கட்சியின் உயர் பீடம் வழங்கியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் கவுன்சில் உறுப்பினர் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்தார். upcountry people front national organisation Rajaram latest Tamil news

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மீது கடந்த வாரம் கட்சியின் செயலாளரால் தற்காலிகமாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக அனுப்பப்பட்ட கடிதத்தை நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் உயர் பீட கூட்டத்தின்போது மீளப்பெறப்போவதாக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவர் கட்சியின் தேசிய அமைப்பாளராக தொடர்ந்தும் செயற்படுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்சியின் முக்கியஸ்தர்களிடம் வாக்குவாதம் நடைபெற்றமை தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரணை செய்த ஐவர் கொண்ட குழு அதனுடைய அறிக்கையை நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் உயர் மட்ட குழுக் கூட்டத்தின் போது சமர்ப்பித்ததை தொடர்ந்து இந்த தீர்மானத்தை கட்சியின் உயர் மட்டம் எடுத்துள்ளது.
upcountry people front national organisation Rajaram latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites