கம்பளையில் தான் தான் வளர்த்த வந்த மகளை தாய் ஒருவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். mother murder daughter fire body gampola place latest news
45 வருடங்கள் வரை குறித்த மகளை வளர்த்த தாயே இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளியான 45 வயது மகளை கொலை செய்து சடலத்தை குறித்த தாய் எரித்துள்ளதாக தெரியவருகிறது.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான தாயொருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேரி நோனா என்னும் 45 வயதான மாற்று திறனாளி பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 18ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், கடந்த 19ஆம் திகதி குறித்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவிக்கப்பட்டுள்ளது.
கணவர் இன்றி, வலதுகுறைந்த மகளை மிக நீண்ட காலம் குறித்த பெண் மிகவும் அன்பாக பராமரித்து வந்தார் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்வெட்டியொன்றினால் மகளை தாக்கிக் கொலை செய்து, பல்வேறு பொருட்களை சடலத்தின் மேல் போட்டு குறித்த தாய் தீயிட்டு எரித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பகுதியளவில் எரிந்த சடலத்தின் இரு புறத்திலும் விளக்கு ஏற்றி இரவு முழுவதும் சடலத்துடன் குறித்த பெண் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் அடுத்த நாள் காலையில் அனைவரிடமும் மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சடலத்தை பார்த்த கிராம உத்தியோகத்தர் தீ காயங்கள் காணப்படுவதனால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் அறிவித்ததை தொடர்ந்து பொலிஸார் குறித்த தாயை கைது செய்துள்ளனர்.
தாய் மகளை கொன்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
mother murder daughter fire body gampola place latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com