கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்

0
602
tamil news husband murdered wife sharp knife attack beliyatha

(tamil news husband murdered wife sharp knife attack beliyatha)

பெலி அத்த, நாகுலுகம பகுதியில் நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் கடந்த சில காலமாக இருந்த பிரச்சினை தீவிரமடைந்ததன் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாகுலுகம பகுதியை சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான கணவன் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பெலிஅத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(tamil news husband murdered wife sharp knife attack beliyatha)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites