கழுவேற்றுபவர்களுக்கு உயர்ந்த சம்பளம், உத்தியோகபூர்வ வீடு, பாதுகாப்பு வழங்கத் தீர்மானம்!

0
373
tamil news Executioner sri lanka interviews salary increments house

(tamil news Executioner sri lanka interviews salary increments house)

இலங்கையில் மரண தண்டனை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளமையால் அலுக்கோசு (கழுவேற்றுபவர்) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைய அலுக்கோசு பதவிக்கு தெரிவு செய்யப்படுவோருக்கு அதிகபடியான வரப்பிரசாதங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கழுவேற்றும் பணியில் உள்ளவர்களுக்கு இதுவரை வழங்கிய சம்பளத்தை விட அதிக சம்பளம் மற்றும் மேலதிக பல சலுகைகளை வழங்க சிறைச்சாலை திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது தொழிலாளர் தர பதவிக்கு கிடைக்கும் கழுவேற்றுபவரின் அரசாங்க சம்பளமான 35000 ரூபாயை 50000 ரூபா வரை அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பில் முதலில் ஆராயப்படவுள்ளது.

அந்த வகையில், பதவிக்கு இணைத்து கொள்ளப்படுபவர்களுக்கு உத்தியோகபூர்வ வீடு வழங்குவதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவைளை, இந்த பணியில் இருந்து விலகிய இருவர் மீண்டும் தமக்கு தொழிலை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

2013 ஆம் ஆண்டு முதல் இந்த பதவி வெற்றிடமாக இருந்தது.

எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் கழுவேற்றும் பணிக்கு மீண்டும் விண்ணப்பம் கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(tamil news Executioner sri lanka interviews salary increments house)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites