மன்னார் – பழைய மொத்த கூட்டுறவு விற்பனை நிலைய கட்டடத்தொகுதி இருந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழியில் இருந்துஇ இதுவரையில் 44 மனித எலும்புக் கூடுகள் மற்றும் அவற்றின் உடல் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. forty four skeleton rover mannar finish Lankan latest news
குறித்த இடத்தில் இருந்த கட்டடம் உடைக்கப்பட்டு அங்கிருந்த மண்இ மன்னார் எமில் நகர் பிரதேசத்திற்கு கொண்டுச் சென்று கொட்டப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி மனித எலும்பு துண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்துஇ அது தொடர்பில் மன்னார் காவல்துறையினர்இ மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர்இ அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்படிஇ கடந்த 37 நாட்களாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அதன்போது 44 முழுமையான மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த பகுதியில் 45 சதவீத அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகஇ அந்த அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட 44 மனித எலும்புக் கூடுகளில் சிறுவர்களின் எலும்பு கூடுகளும் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
இதனிடையேஇ யாழ்ப்பாணம் – கல்வியன்காடு பிரதேசத்தில் நிலத்தடி நீர் விநியோக கட்டமைப்பு பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில்இ அங்கு இருந்து சில மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
நிலத்தின் கீழ் சுமார் மூன்று அடி ஆழத்தில் இருந்து குறித்த மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
forty four skeleton rover mannar finish Lankan latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com