வகுப்புக்கு சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்

0
723
Two teenage students drowned wile bathing Dee Ella Oya Veyangoda

(Two teenage students drowned wile bathing Dee Ella Oya Veyangoda)

வெயாங்கொட, தீஎல்ல ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

16 மற்றும் 17 வயது மதிக்கத்தக்க இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 01.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நான்கு மாணவர்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு தீஎல்ல ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, ஒரு மாணவன் நீரில் முழ்கிய போது அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றைய மாணவனும் நீரில் மூழ்கி பலியானதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

(Two teenage students drowned wile bathing Dee Ella Oya Veyangoda)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites