பௌத்த பிக்குவிடமா…… நம்ப முடியவில்லை…!

0
439
one monk arrest puttalam district chilaw town illegal Lankan currency

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். one monk arrest puttalam district chilaw town illegal Lankan currency

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளத்பிட்டிய ரஜமாக விகாரையின் விகாராதிபதியாக இருந்துள்ளதாக கூறப்படும் சந்தேகநபர் பின்னர் நவத்தேகம மகமெத்தேவ பிரதேச விகாரை ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பல கடைகளில் ஆயிரம் ரூபா நாணயத் தாளை கொடுத்து பலவிதமான பொருட்களை கொள்வனவு செய்ய சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது வியாபாரி ஒருவரால் சிலாபம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தேரரிடமிருந்து போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த தேரர் வருகை தந்த முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியை அந்த இடத்திலேயே வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
one monk arrest puttalam district chilaw town illegal Lankan currency

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites