2020 ஆம் ஆண்டளவில் கடவத்தை – மீரிகம அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் நிறைவு

0
425
construction works road Kadawatha Mirigama planned Central Highways

(construction works road Kadawatha Mirigama planned Central Highways)

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கடவத்தை மற்றும் மீரிகமவிற்கு இடையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் என்று திட்டப் பணிப்பாளர் சரத்குமார தெரிவித்துள்ளார்.

37 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக 15,800 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

இதில் 85 சதவீதமான நிதியை சீன நிறுவனம் ஒன்று வழங்கவுள்ளதுடன், எஞ்சிய தொகையை உள்ளூர் வங்கிகள் வழங்கவுள்ளன.

கடவத்தைக்கும், மீரிகமவுக்கும் இடையிலான வீதியை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியை நிர்மாணித்த சீன நிறுவனமே இதனையும் நிர்மாணிக்கவுள்ளது.

தாழ்நில அபிவிருத்தி சபையின் ஆலோசனைக்கு அமைய சுற்றுலாப் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக திட்டப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதற்கு தேவையான காணியை சுவீகரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

அதேபோன்று காணிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணியில் 60 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச தகவல் திணைக்களம்

(construction works road Kadawatha Mirigama planned Central Highways)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites