கனடாவின் Port Colborne பகுதியில், நால்வர் உயிரிழந்த குடியிருப்பின் உரிமையாளருக்கு 100,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Canada perpetrator $ 100,000 fine
Port Colbrone பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
குடியிருப்பு ஒன்றில் Tammy Burd, அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் இவர்களின் பாட்டி என நான்கு பேர் வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தன்று நள்ளிரவு 1.20 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக விரைந்து சென்ற மீட்பு குழுவினர், சுமார் 10 அடி உயரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு குழுவினர், நால்வரின் சடலங்களை மீட்டிருந்தனர்.
இவ் விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வாடகைக்கு விடப்பட்டுள்ள குடியிருப்பை முறையாக பராமரிக்க தவறிய குற்றத்திற்காக, அந்த குடியிருப்பின் உரிமையாளரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், 100,000 டொலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
tags :- Canada perpetrator $ 100,000 fine
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.