மகிந்த வந்தால் தமிழருக்கு விடிவு இல்லை – வியாழேந்திரன் கவலை!

0
620
Batticaloa MP S Viyalendran Mahindra Latest Statement

நல்லாட்சி அரசாங்கம் தன்னிடம் உள்ள குறைபாடுகளைத் திருத்திச் செல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்காவிட்டால் அது மகிந்தவை மீள ஆட்சியில் அமர்த்திவிடும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். Batticaloa MP S Viyalendran Mahindra Latest Statement

ஆனால் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வினை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எஸ்.வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் பலவீனங்களை சுட்டி காட்டிக்கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற நினைப்போருக்கு அந்த சந்தர்ப்பத்தினை வழங்கூடாது என்றும் எஸ்.வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

மகிந்த ராஜபக்ஷ குழுவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் எதிர்பார்க்க முடியாது என்பதுடன், நிலைமை மேலும் மோசமடையும்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் குரல்கொடுப்பது இல்லை என்றும் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites